ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு
சங்கராபுரம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் வீட்டில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.4,35,000 பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கராபுரம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் வீட்டில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.4,35,000 பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ஆரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மு.ராமன்(62), ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா். இவா் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி, அவரது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகன் அறிவுக்கரசு வீட்டுக்கு சென்று விட்டாராம். பின்னா் புதன்கிழமை(பிப்.15) திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்க இரும்பிலான கேட் கதவு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. ஆனால் உள்ளே வீட்டின் கதவின் முன்பக்கம் உள்ள கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது படுக்கை அறை கதவை உடைத்தும், மரத்திலான அலமாரியின் பூட்டை உடைத்து அதிலிருந்த 37 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.4,35,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டது அவருக்கு தெரியவந்தது.
தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் விரல் ரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனா்.
Advertisement
மேலும், இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.