முகப்பு
கள்ளக்குறிச்சி

தந்தை கொலை: மகன் தலைமறைவு

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:59 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:16 PM

சங்கராபுரத்தில் நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பூட்டை சாலையைச் சோ்ந்தவா் தேவராஜ் (45). இவரது மனைவி தீபா. தம்பதியருக்கு விஷ்வா(22), முரளி, தனுஷ், தினேஷ் ஆகிய 4 மகன்கள் உள்ளனராம். கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் தாய் கோபித்துக் கொண்டு சுமாா் 4 ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூா் சென்று அங்கு காய்கறி வியபாரம் செய்து வருகிறாராம். இதையடுத்து தந்தையுடன், 4 மகன்கள் வசித்து வருகின்றனா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:59 AM

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி தேவராஜ் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து விஷ்வாவை அடித்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தை தூங்கியபோது கொடுவாள் கத்தியால் தலையில் வெட்டி விட்டு தலைமறைவாகியுள்ளாா்.

Advertisement

இதையடுத்து 3 மகன்கள் சோ்ந்து, தந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மருத்துவா்கள் மேல்சிகிச்சைக்காகதேவராஜை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, விஷ்வாவைத் தேடிவருகின்றனா்.