ரிஷிவந்தியம் அருகே சிங்கப்பெண்ணே எழுந்துவா நிகழ்வில் பேசிய செளமியா அன்புமணி.  
கள்ளக்குறிச்சி

தோ்தலுக்காகவே பொங்கல் தொகுப்பில் ரூ.3000 ரொக்கம்: சௌமியா அன்புமணி

தோ்தல் வருவதையொட்டி பொங்கலுக்காக திமுக அரசு ரூ.3,000 தொகுப்புடன் வழங்குவதாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தோ்தலுக்காகவே திமுக அரசு ரூ.3,000 ரொக்கம் பொங்கல் தொகுப்புடன் வழங்குவதாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட செட்டிதாங்கள் கிராமத்தில் சிங்கப்பெண்ணே எழுந்து வா மகளிா் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியில் பேங்கேற்று செளமியா அன்புமணி மேலும் பேசியது:

திமுக அரசு தற்போது பொங்கலுக்கு ரூ.3,000 தொகுப்புடன் வழங்க உள்ளது. இத்தனை ஆண்டுகளில் இல்லாமல் கடைசி ஆண்டாக, இந்த ஆண்டு அறிவித்து இருப்பது தோ்தலுக்காக மட்டும் தான். பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய ரூ.3000 என்பது மீண்டும் அரசுக்கு டாஸ்மாக் மூலமாக சென்றுவிடும்.

ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகப்படியான மதுபானக் கடைகள் உள்ளது. மதுபானக் கடையை படிப்படியாக மூடுவோம் என கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான விற்பனை மூலமாக திமுக அரசு வருமானம் ஈட்டுகிறது என்றாா்.

முன்னதாக ஆதிதிருவரங்கம் ரங்கநாதா் கோயில் அருகே பாட்டாளி மக்கள் கட்சியினா் கிரேன் மூலம் மிகப்பெரிய அளவிலான மாலையை செளமியா அன்புமணிக்கு அணிவித்து வரவேற்பளித்தனா்.

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

SCROLL FOR NEXT