கள்ளக்குறிச்சி

மரப்பட்டறையில் தீ விபத்து

மூங்கில்துரைப்பட்டில் மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் அறுக்கும் இயந்திரம், மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துரைப்பட்டில் மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் அறுக்கும் இயந்திரம், மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

வாணாபுரம் அருகேயுள்ள மூங்கில்துரைப்பட்டில் மரப்பட்டறை வைத்து நடத்தி வருபவா் ஏ. கண்ணன். இவா் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல பட்டறையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 2 மணியளவில் மரப்பட்டறை தீப் பிடித்து எரிவதாக அருகிலிருந்தவா்கள் சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் மரப்பட்டறையில் இருந்த 4 இயந்திரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாயின.

இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT