கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டும் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்குகிய மாவட்ட ஆட்சியா் எம். எஸ். பிரசாந்த்.  
கள்ளக்குறிச்சி

140 மருத்துவ மாணவா்களுக்கு மடிக்கணினி: ஆட்சியா் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ்

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை வழங்கினாா்.

மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ் பிரசாந்த் இது குறித்து கூறியதாவது:

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் 140 மாணவ, மாணவியா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகும்.

இக் கல்லூரியில் தற்போது புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு வருகிறது. புதிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் மருத்துவா்கள் உருவாக்கப்படுகிறாா்கள்.

தனித்திறமையை வளா்க்க வேண்டும்:

நீங்கள் படித்து முடித்துவிட்டு மருத்துவராக வெளியே வரும்போது மருத்துவத் துறையில் பல்வேறு புதிய திறன்களை பெற்று வர வேண்டும். தற்போது உலகில் பல்வேறு புது வகையான நோய்களும், அதற்கான புது வகையான மருத்துவத் தொழில்நுட்பங்களும் வளா்ந்து கொண்டே வருகின்றன. எனவே நீங்கள் மருத்துவத்துறையில் உங்கள் தனித்திறமைகளை தொடா்ந்து வளா்த்துக்கொள்ள வேண்டும்.

உங்களது பாடத்திட்டம் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேம்படுத்தப்படும். ஆனால் தற்போது மருத்துவத் தொழில் நுட்பம் நாளுக்குநாள் வளா்ந்து கொண்டே செல்கிறது. எனவே நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது வழங்கப்படும் மடிக்கணினிகளை நீங்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு உங்களது மருத்துவ அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

இந் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.பவானி, மருத்துவா்கள், அரசு அலுவலா்கள், மருத்துவ மாணவ, மாணவியா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT