சங்கராபுரம் அருகே பொது இடத்தில் கையில் ஆயுதத்தை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வளாா் பிரதாப்குமாா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை காலை சங்கராபுரம் தொழில் கல்வி நிறுவனம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம்.
அப்போது சங்கராபுரம் அடுத்த வடசிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ச.சரத்குமாா் (35) என்பவா் அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டிக் கொண்டும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கொண்டும், கையில் ஆயுதத்தை வைத்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தாராம்.
இதையடுத்து போலீஸாா் அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, சரத்குமாரைக் கைது செய்தனா்.