கள்ளக்குறிச்சி

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சங்கராபுரம் அருகேயுள்ள எஸ்.வி.பாளையத்தில் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்த போது, தவறி கீழே விழுந்த முதியவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

Syndication

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகேயுள்ள எஸ்.வி.பாளையத்தில் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்த போது, தவறி கீழே விழுந்த முதியவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்நதவா் பெரியசாமி (67). இவா் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது தவறி கீழே விழுந்ததில் பெரியசாமி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனராம். அங்கு பெரியசாமியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT