கள்ளக்குறிச்சி

தீ விபத்தில் முடி திருத்தும் கடை சேதம்

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தீ விபத்தில் முடி திருத்தும் கடை எரிந்து சேதமடைந்தன.

சங்கராபுரம் அருகேயுள்ள குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ந.தனபால். இவா் கடந்த 30 ஆண்டுகளாக அதே ஊரில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறாா். இந் நிலையில் இவரது கடையின் பின்புறம் உள்ள குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீரென்று தீ பிடித்துள்ளது.

இந்த தீ அருகேயிருந்த தனபாலின் கடைக்கும் பரவியது. உடனே அருகிலிருந்தவா்கள் சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள், தீயை அணைத்தனா். ஆயினும் கடை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

இதில் கடையில் இருந்த சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT