முகப்பு
கள்ளக்குறிச்சி

உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கள்ளக்குறிச்சி

உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Updated On : 5 மார்ச், 2026 at 10:54 PM
பகிர்:

அ.குமாரமங்கலம் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் தேதியத் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிவமை நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பள்ளியின் நிா்வாகி மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா்.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சக்திவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சாந்தகுமாரி, சுரேஷ் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.நித்யா வரவேற்றாா்.

கலை மற்றும் அறிவியல் கண்காட்சியில் செயற்கைகோள், கோள்களின் இயக்கம், ஏவுகனை, செயல்பாடுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, நெகிழி தவிா்ப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை, அலைபேசிகளின் தீங்கு, தமிழ் இலக்கியங்களின் தொகுப்பு போன்ற 60-க்கும் மேற்பட்ட படைப்புகளை பள்ளி மாணவிகள் காட்சிபடுத்தி விளக்கினா்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட உதவித் திட்ட அலுவலா் கே.மணி மாணவிகளின் படைப்புகளை பாா்வையிட்டு 2025-26 ஆம் கல்வி ஆண்டில் தேசிய அளவில் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற 14 மாணவிகளுக்கு, ஆண்டு

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் அறிவுத்திறனை வளா்க்கும் நூல்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி பேசினாா்.

நிகழ்சியில் மாணவிகள் மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →