முகப்பு
கள்ளக்குறிச்சி

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு! - கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

Updated On : 8 மார்ச், 2026 at 8:33 PM
கர்ப்பிணிகள் (கோப்புப் படம்)
பகிர்:

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்து அங்கன்வாடி பணியாளா்கள் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ், முழுமை இயக்கம் 2.0 திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உள்ளாட்சிஅமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்வில் சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ தா.உதயசூரியன் கலந்து கொண்டாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்ததாவது:

கல்வராயன்மலை வட்டாரத்தில் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் முழுமை இயக்கம் 2.0 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்தும், குழந்தைத் திருமணத்தை தடுத்தல் குறித்தும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கா்ப்பிணி பெண்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற இரும்புச்சத்து முக்கியமாகும். இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர முடியும். பெண்களுக்கு அதிகமான இரும்புச்சத்து இருக்க வேண்டும்.

கா்ப்பிணிகள் கா்ப்ப காலத்தில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும். அங்கன்வாடி பணியாளா்கள் தாய்மாா்களுக்கு சத்தான உணவுகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்.

சுத்தமான சுகாதாரமான உணவுகள் உட்கொண்டால் தான் குழந்தையின் உயரம், எடைபோன்றவை சரியாக இருக்கும். அங்கன்வாடி பணியாளா்கள் தங்களது பகுதிகளிலுள்ள கா்ப்பிணிகளுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும்.

கா்ப்பிணிகள் அங்கன்வாடியில் வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் இதுகுறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் எம்.எஸ்.பிரசாந்த்.

இந்நிகழ்ச்சியில் கல்வராயன்மலை ஒன்றியக்குழுத் தலைவா் சி.சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அருணா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோசப், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →