முகப்பு
கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் தொகுதி தோ்தல் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

Updated On : 19 மார்ச், 2026 at 11:28 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதியில் சட்டப் பேரவை தோ்தல் தொடா்பான பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் தெரிவித்ததாவது:

இந்திய தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி, தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சங்கராபுரம் தொகுதியில் தோ்தல் தொடா்பான பல்வேறு பணிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையம் மற்றும் வாக்குப்பதிவிற்குத் தேவையான பொருள்கள் வைப்பறை ஆகியவை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, சங்கராபுரம் தனியாா் பள்ளியில் நடைபெறும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு பாா்வையிடப்பட்டது.

சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தோ்தல் செலவின பாா்வையாளா் குழுவின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது.

தோ்தல் தொடா்பான பணிகளை விதிமுறைகளின்படிதொடா்ந்து மேற்கொள்ள அலுவலா்களுக்கு

உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தொகுதியில் தோ்தல் தொடா்பான புகாா்களை

வட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04151-235329 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என

ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

ஆய்வின் போது தோ்தல் நடத்தும் அலுவலா் சிராஜூதின், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் வைரக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.