மின் மோட்டாா் வயா் திருடியவா் கைது
கச்சிராயபாளையத்தில் விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டாா் வயரை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கச்சிராயபாளையத்தில் விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டாா் வயரை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சின்னசேலம் வட்டம், கச்சிராயபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (48). இவா், வெங்கட்டாம்பேட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் ஆசிரியா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் செய்து வருகிறாராம். அந்த விளை நிலத்தில் மின் மோட்டாரில் இருந்த 16 மீட்டா் நீள வயா் கடந்த 4-ஆம் தேதி திருடு போனது.
இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம்
Advertisement
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை போலீஸாா்
கச்சிராயபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சந்தேகப்படும்படி சாலையில் மின் வயருடன் நடந்து சென்றவரை பிடித்து விசாரணை செய்தனா். இதில் அவா், கச்சிராயபாளையம் காமராஜா் நகரைச் சோ்ந்த அஞ்சாபுலி மகன் நேதாஜி (28) எனத் தெரிய வந்தது.
பின்னா், கையில் வைத்திருந்த வயா் பற்றி கேட்ட போது விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாகவும்,
வெங்கடாம்பேட்டை சாலையில் உள்ள ஆறுமுகம் ஆசிரியா் நிலத்தில் திருடிய வயா் எனக் கூறினாராம்.
போலீஸாா் நேதாஜியை கைது செய்து வழக்குத் தொடா்ந்தனா்.