புதுச்சேரி கம்பன் விழா நிறைவு
புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற 48-வது ஆண்டு கம்பன் விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற 48-வது ஆண்டு கம்பன் விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
3-ம் நாள் தொடக்க நிகழ்ச்சியாக, "கம்பக் கடலில் கலக்கும் சமய நதிகள்' எனும் தலைப்பில் சிந்தனை அரங்கம் நடைபெற்றது.
அதில், "சைவநதி' என்று தெ.ஞானசுந்தரம், "வைணவநதி' என்று இளம்பிறை மணிமாறன், "சமண நதி' என்று கவிக்கோ அப்துல்ரகுமான் ஆகியோர் பேசினர். உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து தலைமை வகித்தார்.
Advertisement
Advertisement
இதனைத்தொடர்ந்து, "கவியரசரும் கரும்பரசரும்' எனும் தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது. ரா.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
பெஞ்சமின் லெபோ, ஏ.ஆர்.ராமநாதன் ஆகியோர் பேசினர்.
பின்னர், மாலையில் சிந்தனை உரை நிகழ்ச்சியில் "திருமறை நெறிநாட்டும் அறுகுண நாயகன்' எனும் தலைப்பில் இ.ஜெயராஜ், ரத்தின ஜனார்த்தனன் ஆகியோர் பேசினர்.
இதில், முதல் நாள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு நடைபெற்றது.
நடுவர்களாக சிலம்பொலி செல்லப்பன், அ.அறிவொளி, சு.சுந்தரவடிவேல் ஆகியோர் இருந்தனர்.
நோக்கர்கள் சார்பில் ரெ.சண்முகவடிவேல், கே.சுமதி, பிரசாந்தன், கோ.சாரங்கபாணி ஆகியோர் பேசினர்.