புதுச்சேரி

சென்டாக் பொறியியல் கலந்தாய்வு: 2,197 இடங்கள் நிரம்பின

DIN

பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான முதல் கட்ட சென்டாக் கலந்தாய்வில் இதுவரை 2,197 இடங்கள் நிரம்பியுள்ளன. மேலும்1,994 இடங்கள் காலியாக உள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இரண்டு அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 561 இடங்களும், 15 தனியார் பொறியியல் கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீடாகப் பெறப்பட்ட 3,630 இடங்களும் என மொத்தம் 4,191 இடங்கள் உள்ளன.
இதற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 2,197 இடங்கள் நிரம்பியுள்ளன. இது 53.45 சதவீதமாகும்.
மேலும், 1,994 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பபடும் என்றும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தன.
ஆனால், நிகழ் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம், உயிரியல் பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்குவதில் காலதாமதம் உள்ளிட்ட காரணங்களால், மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொறியியல் பாடப் பிரிவுகளில் சேர்ந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT