புதுச்சேரி

நாட்டு வெடிகுண்டு பறிமுதல்: 3 பேர் கைது

தினமணி

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக 3 இளைஞர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் வடக்கு காவல் கண்காணிப்பாளர் ரக்ஷனா சிங் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை இரவு
 கோரிமேடு உதவி ஆய்வாளர் கலையரசன் மற்றும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஷண்முகாபுரத்தைச் சேர்ந்த செல்வம் மகன் அருண் (எ) குட்டி (20), தொண்டமாநத்தம் மாகுளத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் பாஸ்கர் ( 21), அர்ஜூன் மகன் சூர்யா (20) என்பது தெரியவந்தது.
 மேலும், அவர்கள் வைத்திருந்த பையில் நாட்டு வெடிகுண்டும் இருந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
 அப்போது பாஸ் (எ) பாஸ்கர் மீது ஏற்கெனவே வெடிகுண்டு வைத்திருந்த வழக்கு மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு இருப்பது தெரிய வந்தது. கடந்த 15 நாள்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அணைக்கரை வீதியில் வெடிகுண்டு வீசியவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசினால் தங்களை பெரிய ரெüடியாக நினைத்து எல்லோரும் பயப்படுவார்கள் என்பதற்காக வெடிகுண்டை எடுத்து வந்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அருண் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் ஒரு வெடிகுண்டையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT