புதுச்சேரி

அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவரை சீரமைக்கக் கோரிக்கை

தினமணி

அரசுத் தொடக்கப் பள்ளியின் சுற்றுச் சுவரைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.
 அந்தக் கட்சியின் பாகூர் லெனின் நகர் கிளைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பாகூர் தொகுதியின் செயலர் வெ.கலியமூர்த்தி கட்சியின் கொடியேற்றி வைத்தார். கட்சியின் மாநிலத் துணைச் செயலர் அ.ராமமூர்த்தி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அம்பேத்கர் நகர் முகப்பில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும். பாகூர் சேறு வாய்க்கால் குடியிருப்புப் பகுதியில் செல்வதால், அந்த வாய்க்காலை தூர்வாரி இரு கரையும் பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 புதிதாக வழங்கப்படவுள்ள இலவச வீட்டுமனைப் பிரிவைச் சுற்று செல்லும் மனப்பட்டான் பாசன வாய்க்காலைத் தூர்வாரி கரையைப் பலப்படுத்தி, இணைப்புப் பாலம் கட்டிக் கொடுப்பதோடு, மனைப் பிரிவில் மண்கொட்டி மேடாக்கி தகுதியானவர்களுக்கு அரசியல் சார்பின்றி குழு அமைத்து மனைப்பட்டாக்களை வழங்க வேண்டும்.
 அரசுத் தொடக்கப் பள்ளியில் சேதமடைந்துள்ள சுற்றுச் சுவரைச் சீரமைக்க வேண்டும். சுகாதாரச் சீர்கேட்டுடன் செயல்பட்டு வரும் பொதுக் கழிப்பிடத்தை நவீனக் கழிப்பிடமாக மாற்றித் தர வேண்டும். பி.ஆர்.அம்பேத்கர் நகர் பகுதியில் அரசு பயன்பாட்டுக்கு ஒதுக்கிய இடத்தில் வழங்கிய இலவச மனைப்பட்டாவை ரத்து செய்து, அந்த இடத்தில் நூலகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில் பாகூர் தொகுதியின் துணைச் செயலர் து.ராஜா, தொகுதி குழு உறுப்பினர் பெ.விஜயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கிளைச் செயலராக ஏ.சக்திவேல், துணைச் செயலராக கா.சுந்தரமூர்த்தி, பொருளாளர் தெ.ராதாகிருஷ்ணன் உள்பட 7 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT