புதுச்சேரி

புதுவையில் 2 கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு

தினமணி

புதுவையில் 2 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 புதுவை சாரத்தில் முத்து விநாயகர் கோயில் உள்ளது. கடந்த புதன்கிழமை இரவு இந்தக் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டப்பட்டிருந்தது. முகமுடி அணிந்து வந்த 3 பேர் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு திருடிச் சென்றது தெரியவந்தது. இந்தக் கோயிலுக்கு அருகே நாகமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கை அதிகமாக செலுத்தியிருந்தனர். இதற்கிடையே, திங்கள்
 கிழமை காலை கோயிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 இதுகுறித்து, கோயில் நிர்வாகிகள் ஆய்வு செய்தபோது, முத்து விநாயகர் கோயிலில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தைப் போன்றே, இங்கும் கண்காணிப்பு கேமராவை உடைத்து உண்டியல் பணம் திருடப்பட்டிருந்தது. இதேபோல, ரெட்டியார்பாளையம் ஜவகர் நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. உண்டியல் உடைப்பு தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT