புதுச்சேரி

பொறியியல் கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி கட்டடவியல் துறை, இந்திய பொறியாளர் சங்கத்தின் புதுவை மாநிலப் பிரிவு சார்பில், உலக தண்ணீர் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி கட்டடவியல் துறை, இந்திய பொறியாளர் சங்கத்தின் புதுவை மாநிலப் பிரிவு சார்பில், உலக தண்ணீர் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டடவியல் புல முதன்மையர் எஸ்.ஜெயக்குமார் வரவேற்றார்.
 முதல்வர் கே.வெங்கடாஜலபதி, இந்திய பொறியாளர் சங்க புதுவை மாநிலப் பிரிவுத் தலைவர் கே.பழனிராஜா, செயலர் டி.கிரிதர ராவ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
 புதுவை அரசின் முன்னாள் நீர்வளத் துறை அதிகாரி வி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, புதுவையின் நீர் நிலைகள் குறித்த வரலாறு, தற்போதைய நீர் மேலாண்மை, நீர் ஆதாரத்தைப் பெருக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார்.
 இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பங்கேற்ற கட்டடவியல் துறை மாணவர்கள் நீர் மேலாண்மைக் குறித்த தங்களது சந்தேகங்களைக் கேட்டறிந்தனர்.
 விழாவுக்கான ஏற்பாடுகளை இந்திய பொறியாளர் சங்கத்தின் புதுவை மாநிலப் பிரிவின் நிர்வாகிகள் திருஞானம், பேராசிரியர் கருணாகரன், கட்டடவியல் துறைப் பேராசிரியர் சீனுவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT