புதுச்சேரி

சர்வதேச அருங்காட்சியக தின விழா

தினமணி

அரிக்கன்மேடு கல்வி நிறுவனம் சார்பில் 5-ம் ஆண்டு சர்வதேச அருங்காட்சியக தினம் நோனாங்குப்பம் ராகேஷ் ஷர்மா துளிர் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 சர்வதேச அருங்காட்சியக சபை 2017ம் ஆண்டின் கருப்பொருளாக, அருங்காட்சியகங்கள் மற்றும் போட்டியிடப்பட்ட வரலாறுகள் என்று அறிவித்துள்ளது. அரிக்கன்மேடு கல்வி நிறுவனத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். புதுவை அறிவியல் இயக்க செயலாளர் அருண் சிறப்புரை ஆற்றினார்.
 உதயனன் மற்றும் இளங்கோ தலைமையில் மாணவர்கள் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பேரணி மேற்கொண்டனர்.
 துளிர் இல்ல மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்கள் மற்றும் அதன் தொன்மை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. சிவநேசன் நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT