புதுச்சேரி

புதுவை பல்கலை. மீதான புகார் எதிரொலி: 4 பேர் குழு விரைவில் விசாரணை:யுஜிசி அதிரடி நடவடிக்கை

DIN

புதுவை பல்கலைக்கழகத்தின் மீதான புகாரை அடுத்து 4 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
புதுவை பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 9-ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கியது.
அந்த மாணவர்களுக்கு தேர்வு தொடங்கிய 30 நிமிடத்துக்குப் பிறகே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக நிர்வாகம் காலம் கடந்த நிலையில் வெளியிட்டதாகத் தெரிகிறது.
குறிப்பாக, 2-வது செமஸ்டர் தேர்வு முடிவை, 4-வது செமஸ்டரின் போது வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மறுகூட்டலுக்கு விடைத்தாள் கேட்டு விண்ணப்பிக்கும்போது விடைத்தாள் வழங்குவதில்லை.
ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புடையவர்களின் மாணவர்களுக்கு மட்டும் மறு கூட்டலுக்கான விடைத்தாள் வழங்குவது போன்ற புகார்கள் அண்மையில் எழுந்தன.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) செயலர் ஜஸ்பால் சிங் சாந்து, இணைச் செயலர் சுனிதா ஸ்வாச் ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, புதுவை பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்த யுஜிசி 4 பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் அஜ்மீர் மகரிஷி தயானந்த் சரஸ்வதி பல்கலைக்கழக துணைவேந்தர் கைலாஷ் சோதானி, சென்னை ஐஐடி பேராசிரியர் ஸ்ரீபால் கர்மால்கர், கவுகாத்தி பல்கலைக்கழக பேராசிரியர் மழர் ஆசிப், பெங்களூரு ஐஐஎம் பேராசிரியர் சங்கரஸ்சன் பாசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் புதுவை பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்த விரைவில் வரவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT