புதுச்சேரி

வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வாசிகள் ஆளுநரிடம் புகார்

DIN

புதுச்சேரி முருகங்கப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் கிரண் பேடியிடம் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குடியிருப்பு வாசிகள் புகார் கூறினர்.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவை நகரம் மற்றும் கிராமப் புறங்களில், தனக்கு வரும் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், முருங்கப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் கடந்த 4 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் செய்துதரவில்லை என்று புகார் வந்ததை அடுத்து சனிக்கிழமை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குடியிருப்பு வாசிகள் பலர் தங்களுக்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் வசதி சரிவர செய்து தரவில்லை. மேலும், சொத்து உரிமை பத்திரமும் தரவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆளுநர் கிரண் பேடி, வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. சொத்துரிமை பத்திரம் வழங்கவில்லை எனக் கேட்டார்.
அப்போது குடியிருப்புகளுக்கான இறுதிக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
இதனால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் சொத்துரிமைப் பத்திரம் தரவில்லை என பதில் அளித்தனர். மேலும், குடியிருப்புகளில் தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தனர்.
எனினும் அதிகாரிகள் பதிலில் திருப்தி அடையாத ஆளுநர், இதனை அதிகாரிகள் செய்யவில்லை எனில் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யுங்கள். அவர்கள் அது சரியாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்கள் எனத் தெரிவித்தார்.
அடிப்படை வசதிகளை ஏன் அதிகாரிகள் சரி செய்ய முன்வருவதில்லை என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு அதிகாரிகள் உடனடியாக சரி செய்வதாக தெரிவித்தனர்.
ஆளுநரின் தனிச் செயலர் ஸ்ரீதரன், புதுவை நகராட்சி ஆணையர் அ.கணேசன், வீட்டுவசதி வாரியச் செயலர் கிட்டி பலராம், செயலர் அசோக்ராம், மேற்பார்வைப் பொறியாளர் ஞானமுத்து, ஆலோசகர் சந்திரசேகர் உள்பட பலர் உடன் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT