முகப்பு
புதுச்சேரி

ஊழலின் குகை போல புதுவை மாறி வருகிறது

புதுவை மாநிலம் ஊழலின் குகை போல மாறி வருகிறது என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

புதுச்சேரி

ஊழலின் குகை போல புதுவை மாறி வருகிறது

புதுவை மாநிலம் ஊழலின் குகை போல மாறி வருகிறது என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

புதுவை மாநிலம் ஊழலின் குகை போல மாறி வருகிறது என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
 புதுச்சேரியில் போலியான முகவரி அளித்து, குறைந்த சாலை வரி செலுத்தி, விலை உயர்ந்த பென்ஸ் காரை நடிகை அமலாபால் வாங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
 மாறாக இந்த பிரச்னையில் எந்த ஊழலும் நடக்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்திருந்தார்.
 இதற்கிடையே, கிரண் பேடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
 புதுவை மாநிலம் ஊழலின் குகை போல மாறி வருகிறது. இந்த நாள்களில் ஏற்கெனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததும், அதுதொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணையும் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பதில் முறைகேடு. இதை பொதுப் பணித் துறை செயலாளர் ரத்து செய்து துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.
 சுற்றுலாத் துறையின் தொழில்நுட்ப அனுமதி பெறாமலேயே சொகுசுப் படகுகள் கொள்முதல் நடைபெற்றது. ஆனால், இதில் பணம் தராமல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, புதிதாக வெளிநாட்டு கார்களை வாங்கும் போது அதிக சாலை வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக புதுவையில் மோசடியாக பதிவு செய்வது நடந்துள்ளது.
 எல்ஐசி பத்திரங்கள் மூலம் போலி முகவரி கொடுத்து வாகனங்கள் பதிவு செய்வதையும், தரகர்களால் எவ்வாறு தாற்காலிக முகவரி பெற முடிகிறது என்பது குறித்தும், தரகர்கள்-விற்பனையாளர்கள் இடையேயான இணைப்பு தொடர்பாகவும் விசாரிக்க எல்ஐசி நிறுவன தலைவருக்கு தெரிவிக்கப்படும்.
 சிறிய தொகையிலான எல்ஐசி பத்திரங்களுக்காக தாற்காலிக முகவரிக்கு எவ்வாறு நோட்டரி வழக்குரைஞர்கள் சான்றளிக்கின்றனர். புதுவையில் உள்ள 80 நோட்டரி வழக்குரைஞர்களின் உரிமம் குறித்து ஆய்வு செய்யவும், யாரெல்லாம் எல்ஐசி பத்திரங்களுக்கு தாற்காலிக முகவரி சான்று தருகின்றனர், தவறான தகவல்களை தருவோர் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் சட்டத் துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதனால்தான், புதுவைக்கு என தனியாக உயர் நீதிமன்றக் கிளை, சிபிஐ கிளை அலுவலகம், கண்காணிப்பு அதிகாரி போன்றவை அவசியம் என்றார் கிரண் பேடி.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →