புதுச்சேரி

பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு அங்காடி திறப்பு

தினமணி

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு பல்பொருள் அங்காடியை முதல்வர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார்.
 புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் பாப்ஸ்கோ சார்பில், 25-ஆவது ஆண்டாக ஏஎஃப்டி மைதானத்தில் நடைபெறும் தீபாவளி சிறப்பங்காடி விற்பனையை, முதல்வர் நாராயணசாமி குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியதாவது: கடந்த ஆண்டு ரூ.14 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. நிகழாண்டு 15 கோடி அளவுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 தற்போது தொடங்கியுள்ள விற்பனையானது தினம்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
 பட்டாசு, மளிகைப் பொருள்களை குறைந்த விலையில் மக்கள் வாங்கி பயன் பெறலாம் என்றார்.
 நிகழ்ச்சியில் பாப்ஸ்கோ மேலாண் இயக்குநர், குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும் பலர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT