முகப்பு
புதுச்சேரி

பளு தூக்கும் வீரருக்கு பாராட்டு

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுவை வீரர் கி.ஜானி கிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

புதுச்சேரி

பளு தூக்கும் வீரருக்கு பாராட்டு

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுவை வீரர் கி.ஜானி கிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுவை வீரர் கி.ஜானி கிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.
புதுதில்லியில் தேசிய அளவிலான பளு மற்றும் வலு தூக்கும் போட்டி ஏப்.23 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது.   இதில் புதுவை மாநிலம் சார்பில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஜானி கிருஷ்ணன் பங்கேற்றார்.  அவர் 62 கிலோ பளு தூக்கும் போட்டியில் 2-ஆவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வெள்ளிப்பதக்கம் வென்ற அவர்,  கடந்த 27-ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்தார். அவரை பாராட்டிய முதல்வர், தொடர்ந்து பல வெற்றிகள் குவித்து புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →