பள்ளியில் குழந்தைகள் அறிவியல் திருவிழா
புதுவை அறிவியல் இயக்கம் சார்பில், குழந்தைகள் அறிவியல் திருவிழா புதுச்சேரி அருகேயுள்ள காட்டுப்பாக்கம் அப்ரிஸ் தொடக்கப் பள்ளியில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
புதுவை அறிவியல் இயக்கம் சார்பில், குழந்தைகள் அறிவியல் திருவிழா புதுச்சேரி அருகேயுள்ள காட்டுப்பாக்கம் அப்ரிஸ் தொடக்கப் பள்ளியில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
விஞ்ஞானி தாமஸ் பிரகாசம் நினைவாக நடைபெற்ற இத்திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் அ.ஹேமாவதி, உதவிக்கரங்கள் இல்ல நிர்வாகி ஆலிஸ்
தாமஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் விஜயா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செரிப் ஒருங்கிணைத்தார். புதுச்சேரியில் உள்ள துளிர் இல்லங்களைச் சேர்ந்த அறிவியலில் சாதனைகள் செய்த 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். அறிவியல் முறைகள் குறித்து அறிவியல் திருவிழாவில் 6 பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அறிவோம் அறிவியல், கணக்கும் இனிக்கும், பாட்டும் விளையாட்டும், இயற்கையை படிப்போம், மந்திரமா? தந்திரமா?, கற்பனையும் கைத்திறனும் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெற்றன. கருத்தாளர்களாக சந்திரா, ஹேமாவதி, கமலக்கண்ணன், அருண் நாகலிங்கம், ராதிகா, பக்தவத்சலம், சரவணன், இளங்கோ, அரவிந்தராஜா, சுந்தரமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.