பாரதிதாசன் பிறந்த நாள் விழா
பாவேந்தர் பாரதிதாசனின் 128-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரிபாரதிதாசன் பிறந்த நாள் விழா
பாவேந்தர் பாரதிதாசனின் 128-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசனின் 128-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள பாரதிதாசனின் சிலைக்கு அரசு சார்பில் கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல, பாரதிதாசனின் மகனும், கவிஞருமான மன்னர் மன்னன், பேரன் கவிஞர் கோ.பாரதி மற்றும் குடும்பத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து புதுவை பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிலைக்கும் அமைச்சர் கமலக்கண்ணன், சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ.
லட்சுமிநாராயணன், பாரதிதாசனின் குடும்பத்தினர், தமிழறிஞர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுவை கலை, பண்பாட்டுத் துறை சார்பில், "பாவேந்தர் படைப்பும் கருத்தும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றுப் பேசினர்.