புதுச்சேரி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெட்டிக் கடைக்காரர் கைது

DIN

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக பெட்டிக் கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
புதுவை மாநிலத்தில் குட்கா, ஹான்ஸ் போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இருப்பினும், பலர் விற்பனை செய்து வருகின்றனர். இதைத் தடுக்கும் நோக்கில் புதுச்சேரி உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் பாலகிருஷ்ணன், தன்வந்திரி நகர் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸாருடன் சென்று திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது, பாக்கமுடையான்பட்டில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அக்கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணனை (48) தன்வந்திரி நகர் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 2,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT