புதுச்சேரி

எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு மாரத்தான்

தினமணி

புதுச்சேரியில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
 புதுச்சேரி எச்.பி. சமையல் எரிவாயு நிறுவனம் மற்றும் புதுச்சேரி ஸ்போர்ட்ஸ் பெடரல் அகாதெமி இணைந்து 4-ஆம் ஆண்டு எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 புதுச்சேரி கடற்கரைச் சாலையில் தொடங்கிய இந்த போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சர் மு.கந்தசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் ஆண்களுக்கு 7 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 3 கிலோ மீட்டரும், 14 வயதுக்குள்பட்ட சிறுவர்களுக்கு 5 கிலோ மீட்டரும் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன.
 இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் பங்கேற்றனர்.
 இதில் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ஆண்கள் பிரிவில் முறையே ரூ.5,000, ரூ.2,500, ரூ.1000 என்றும், பெண்கள் பிரிவில் முறையே ரூ.2,500, ரூ.1,500, ரூ.1000, சிறுவர்கள் பிரிவில் முறையே ரூ.3,000, ரூ.2,000, ரூ.1000 என்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT