புதுச்சேரி

அரசின் ரூ. 125 கோடி பிணையப் பத்திரங்கள் ஏலம்

தினமணி

புதுவை அரசின் ரூ. 125 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் விடப்படவுள்ளதாக புதுவை அரசின் நிதித் துறைச் செயலர் கந்தவேலு தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி அரசின் மொத்தம் ரூ. 125 கோடி மதிப்புள்ள 12 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை அரசு ஏலம் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்தப் பிணைய பத்திரங்கள் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரத்துக்கும், அதன் பின்னர் ரூ. 10 ஆயிரத்தின் மடங்குகளிலும் ஏலம் விடப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் பிப். 20}ஆம் தேதி இந்த ஏலத்தை நடத்துகிறது.
எனவே ஆர்வமுள்ளவர்கள், நிறுவனங்கள், கூட்டமைப்புக் குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள், பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் ஆகியவை ஒரு கூட்டு போட்டியில்லா ஏலத்தை அவரை சார்ந்த அனைத்து கூறுகளுக்கும் மின்னணு முறையில் பேசி முடிவு செய்து இந்திய ரிசர்வ் வங்கியின் உள்பிரிவு வங்கியில் தீர்வு மூலம் (core banking solution (E-Kuber)) மும்பை கோட்டையில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதள முகவரியில் ( www.rbi.org.in) பிப்.20-ஆம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏலத்தில் பங்கு பெறும் உறுப்பினர்கள் மின்னணு முறையில் உ-ஓன்க்ஷங்ழ் மூலம் மதியம் 12 மணிக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்தின் முடிவுகள் பிப்.20}ஆம் தேதி மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி இணையதள முகவரியில் வெளியிடும். 
ஏலம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணையப் பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசர்வ் மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளர் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை பிப்.21-ஆம் தேதி வங்கி பணி நேரம் முடிவதற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அரசு பிணையப் பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படக் கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும். 
இந்த வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது ஆக. 21 மற்றும் பிப். 21 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். 
இந்தப் பிணையப் பத்திரங்கள் மாற்றிக் கொடுக்கத் தக்க தகுதியுடையவையாகும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT