புதுச்சேரி

தீயணைப்புத் துறைக்கு ரூ.3.50 கோடி நிதி தேவை

தினமணி

தீயணைப்புத் துறைக்கு ரூ.3.50 கோடி நிதி தேவை என்று கல்வி மற்றும் தீயணைப்புத் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
 சட்டப்பேரவையில் பேசிய நெட்டப்பாக்கம் தொகுதி உறுப்பினர் (காங்.) விஜயவேணி, நெட்டப்பாக்கம் தொகுதி கரையாம்பத்தூரில் இந்த ஆண்டாவது தீயணைப்பு நிலையம் அமைத்துத் தரப்படுமா என்றார்.
 அமைச்சர் கமலக்கண்ணன்: நிதி நிலையை பொறுத்து அமைக்கப்படும்.
 விஜயவேணி: கரையாம்பத்தூர் பகுதியில் அதிகளவில் கூரை வீடுகள் உள்ளன. எனவே விரைந்து கட்டித் தர வேண்டும்.
 அமைச்சர் கமலக்கண்ணன்: தீயணைப்புத் துறைக்கு ஒதுக்கிய நிதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.50 லட்சம் வேறு துறைக்கு மாற்றிக் கொள்ளப்பட்டுவிட்டது.
 ஒரு வாகனம் வாங்கவே ரூ.80 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை செலவாகும். இதனால் இந்த ஆண்டு ரூ.3.50 கோடி நிதி கேட்டுள்ளேன். முதல்வர் நிதி வழங்கினால் உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுவேன்.
 விஜயவேணி: அங்கு கட்டப்படும் குடியிருப்பில் யாரும் குடியேறமாட்டார்கள். எனவே அப்பணத்தில் தீயணைப்பு நிலையம் கட்ட வேண்டும்.
 முதல்வர் நாராயணசாமி: தீயணைப்பு நிலையம் கட்ட கூடுதலாக ரூ.2 கோடியாக உயர்த்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT