முகப்பு
புதுச்சேரி

பேரவையில் ஏடுகளை தமிழில் வழங்க உத்தரவு

பேரவையில் ஏடுகளை தமிழில் வழங்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

பேரவையில் ஏடுகளை தமிழில் வழங்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.
புதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் அரசு பிறப்பித்த ஆணைகள் கொண்ட ஏடுகள் சட்டப்பேரவையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இந்த ஏடுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக பேரவைக்குழுத் தலைவர் ஆ.அன்பழகன், பேரவையில் ஏடுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன. எதுவும் தமிழில் இல்லை. 
தமிழை அரசு புறக்கணிக்கிறதா? தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா, இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், பேரவையில் வைக்கப்பட்ட அனைத்து ஏடுகளையும் உடனடியாக தமிழாக்கம் செய்து தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →