முகப்பு
புதுச்சேரி

"முதல்வரும், அமைச்சர்களும் திறம்பட ஆட்சி நடத்துகின்றனர்'

புதுவையில் பத்திரப்பதிவு நடைபெறவில்லை. கலால்துறையிலும் வருமானம் இல்லை. கடந்த அரசின் கடனுக்கான வட்டியை செலுத்தி வருகிறது. 

புதுச்சேரி

"முதல்வரும், அமைச்சர்களும் திறம்பட ஆட்சி நடத்துகின்றனர்'

புதுவையில் பத்திரப்பதிவு நடைபெறவில்லை. கலால்துறையிலும் வருமானம் இல்லை. கடந்த அரசின் கடனுக்கான வட்டியை செலுத்தி வருகிறது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

புதுவையில் பத்திரப்பதிவு நடைபெறவில்லை. கலால்துறையிலும் வருமானம் இல்லை. கடந்த அரசின் கடனுக்கான வட்டியை செலுத்தி வருகிறது. 
ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தியதால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் முதல்வரும், பேரவைத் தலைவரும், அமைச்சர்களும் திறம்பட ஆட்சியை நடத்தி வருகின்றனர். எனவே, நான் அவர்களுக்குத்தான் நன்றி கூறுவேன் என்றார் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. 
பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மேலும் அவர் பேசியதாவது:
ஆளுநர் மக்களுக்கு நல்லது செய்ய இருக்க வேண்டும். ஆனால் இல்லை. இலவச அரிசி வழங்க, ஏழைகளுக்கு துணி வழங்க, மாணவர்களுக்கு சென்டாக் நிதியுதவி கொடுக்க, முதியோர்களுக்கு ஓய்வூதியத்தொகை வழங்க, மீனவர்களுக்கு பேரிடர் கால நிவாரணம் ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட அனைத்து மக்கள் நல திட்டங்களையும் செயல்படுத்த ஆளுநர் தடையாக உள்ளார். எனவே எதற்காக ஆளுநருக்கு நன்றி சொல்ல வேண்டும்?. 
2 ஆண்டு பணி முடித்தால் புதுவையில் இருந்து கிளம்பிவிடுவேன் என்று கூறினார். அவ்வாறு சென்றால் தில்லிக்கு விமானம் ஏறிச்சென்று அவருக்கு நேரில் நன்றி தெரிவிப்பேன் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →