புதுச்சேரி

கடலில் ஆபத்து காலங்களில் அறிவிப்புகளை மீனவர்களுக்கு அளிக்க புதிய ஏற்பாடு

தினமணி

கடலில் ஆபத்து காலங்களில் அறிவிப்புகளை மீனவர்களுக்கு அளிக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 பேரிடர் பாதுகாப்புக்காக 2008-ஆம் ஆண்டு முதல் புதுவை பலநோக்கு சேவா சங்கம் மற்றும் கடல் தகவல் சேவைகள் தேசிய கடல் மையம், இந்திய தேசிய மையம் இணைந்து புதுவை கடலில் காற்றின் வேகம், கடல் அலையின் உயரம், மற்றும் மீன்வளத்தை அறிய மிதவைப் பந்து மிதக்க விடப்பட்டுள்ளது.
 செயற்கைகோள் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஆண்டனா மூலம் பிஎம்எஸ்எஸ்எஸ் நிறுவனத்தில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, மீனவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
 இதன் மூலம் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்களை மீட்கவும் இவை பயன்படுகிறது. இத்தகவல்கள் ஆபத்து காலங்களில் உடனே அவர்களை சென்றடையும் விதமாக தற்போது செய்தித்தாள்கள், அகில இந்திய வானொலி நிலையம் உள்ளிட்ட 7 வானொலிகளில் ஒளிபரப்பு செய்யும் ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளது.
 இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள புதுவை பல்நோக்கு சமூக சேவா மைய அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் இன்போஷிஸ் விஞ்ஞானி ரமேஷ்குமார், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி நிர்வாகி செந்தில்குமார், புதுவை பலநோக்கு சமூக சேவா மைய நிர்வாக இயக்குநர் ஜோசப்அருமைசெல்வம், நிதி மற்றும் நிர்வாக மேலாளர் பிரிஜித் செல்வராஜ் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

உன் பார்வையில்..

SCROLL FOR NEXT