முகப்பு
புதுச்சேரி

அரசுப் பள்ளியில் அறிவியல் தின விழா

புதுவை மாநிலம், அரியாங்குப்பம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

புதுவை மாநிலம், அரியாங்குப்பம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
 விழாவில் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் துரை ராமலிங்கம் வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர்கள் அச்சுதன் (நிலை 1), மாலதி (நிலை 2) ஆகியோர் தலைமை வகித்தனர்.
 சமுதாய நலப் பணித் திட்ட மாநில பொறுப்பாளர் மதிவாணன் அறிவியல் கருத்துகளை மாணவர்களிடம் பகிர்ந்தார். புதுவை அறிவியல் இயக்க செயலர் அருண் நாகலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சர் சி.வி.ராமன் பற்றிய அரிய பல தகவல்களை எடுத்துரைத்தார்.
 நிகழ்ச்சியில் மாணவர்களின் அறிவியல் நாடகமும், அறிவியல் தலைப்புகளில் மாணவர்களின் உரையும் இடம்பெற்றன. இறுதியாக பள்ளி வளாகத்தில் மூலிகை தாவரங்கள் மற்றும் சிறு செடிகளை சிறப்பு விருந்தினர்கள் நட்டனர்.
 மாணவர்களை வாழ்த்தி அறிவியல் அறிஞர்களின் புத்தகங்களை பரிசாக வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி சமுதாய நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →