கிராம வங்கி ஊழியர்கள் போராட்டம்
வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து, புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து, புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பதவி உயர்வு, கருணை அடிப்படையில் வேலை, தாற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் கிராம வங்கி ஊழியர்கள் கடந்த மூன்று தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி ஊழியர்களும் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியின் தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு பிரதேசத் தலைவர் முருகன், செயலர் சீனுவாசன், இணைச் செயலர் மதிவாணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவித் தலைவர் கொளஞ்சியப்பன், வங்கி ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி
ஜோசப், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் விர. அரிகிருஷ்ணன், எல்ஐசி முகவர் சங்க நிர்வாகி ராம்ஜி, சிஐடியு காபிஅவுஸ் தொழிலாளர்கள் சங்க கெளரவத் தலைவர் தா.முருகன், இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இந்தப் போராட்டத்தில் திரளான வங்கி ஊழியர்கள் பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர்.