புதுச்சேரி

கஞ்சா விற்பதாக விடியோ எடுத்து இளைஞருக்கு மிரட்டல்

DIN

புதுச்சேரியில் கஞ்சா விற்பதாக விடியோ எடுத்து இளைஞரை மிரட்டிய, திருவண்ணாமலையைச் சேர்ந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 புதுச்சேரி கவுண்டன்பாளையம் கருமாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் விக்கி, பெயின்டர். இவரும் வெண்ணிலா நகரைச் சேர்ந்த சக்தியும் நண்பர்கள். இவர்கள் இருவரும் தட்டாஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள தேநீர் கடையில் புகைப்பிடிப்பது வழக்கம். அப்போது, அங்கு வந்து சென்ற திருவண்ணாமலையைச் சேர்ந்த பவன்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
 பவன்குமாருக்கு கஞ்சா விற்கும் கும்பலுடன் தொடர்பு இருந்ததால், அவர் தான் வாங்கி வந்த கஞ்சாவை விற்றுத்தரும்படி விக்கியை வற்புறுத்தினாராம். இதற்கு விக்கி மறுத்துள்ளார். அதனால், அந்த கடையின் முன்பு பவன்குமார் வேண்டுமென்றே தான் வைத்திருந்த 150 கஞ்சா பொட்டலங்களை கீழே போட்டார்.  
பின்னர், அதை எடுத்து தருமாறு விக்கியிடம் வலியுறுத்த, அவரும் கஞ்சா பொட்டலங்களை பொறுக்கினாராம். அந்தக் காட்சியை பவன்குமார் தனது செல்லிடப்பேசியில் விடியோ எடுத்தார்.  பின்னர், அந்த விடியோவை விக்கியிடம்  பவன்குமார் காண்பித்து ரூ.30 ஆயிரம் தராவிட்டால் கஞ்சா விற்றதாக காவல்துறையில் ஆதாரத்துடன் புகார் அளித்துவிடுவதாக நேரிலும்,  செல்லிடப்பேசி மூலமும் மிரட்டி வந்தாராம்.
 இதனை விக்கி தனது தாயிடம் தெரிவித்தார். இதையடுத்து, விக்கியின் தாய் பவன்குமாரிடம் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி கெஞ்சியுள்ளார். ஆனாலும், பவன்குமார் தொடர்ந்து மிரட்டி வந்தாராம். இந்த நிலையில், கடந்த நவ.12-ஆம் தேதி விக்கியும், அவரது தாயும் ரூ.2 ஆயிரம் எடுத்துக்கொண்டு பவன்குமாரை சந்திக்க காமராஜர் சாலையில் உள்ள தட்டாஞ்சாவடி பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றனர்.
 அங்கு ரூ.2 ஆயிரத்தை பவன்குமாரிடம் கொடுத்தபோது, அதை ஏற்க மறுத்த அவர் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
இந்த சம்பவம் தொடர்பாக விக்கி தனது தாயுடன் சென்று கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து பவன்குமாரை தேடி 
வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT