புதுச்சேரி

பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

DIN

பிரான்ஸ் குடியுரிமை பெற்றவரை இரும்புக் கம்பியால் தாக்கியதாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர் மனோகர் (58).  இவர்,  ரெட்டியார்பாளையம் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த வெற்றிவேல் (24),  அவரது உறவினர் சிலம்பரசன் (17) ஆகியோருடன் வில்லியனூர் மாதா தேவாலயத்துக்கு சனிக்கிழமை பாதயாத்திரை மேற்கொண்டார்.  அதன் பின்னர், அவர்கள் மூவரும் வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் பூக்கடையில் நின்றிருந்தனர்.
அப்போது அப்பகுதியில்,  பூ வியாபாரி சண்முகம் (49),  பூக்களின் மீது தண்ணீர் தெளிப்பதைப் போல, கடையோரம் நின்றிருந்தவர்கள் மீது தண்ணீரை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால்  இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  
இதையடுத்து சண்முகம்,  கல்லூரி மாணவரான அவரது மகன் முகிலன் (20) இருவரும் சேர்ந்து மனோகர்,  வெற்றிவேல்,  சிலம்பரன் ஆகியோரை இரும்புக் கம்பியால் தாக்கினார்களாம். 
இதில் பலத்த காயமடைந்த மனோகர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  
இது குறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தந்தை, மகன் ஆகிய இருவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT