ஆளுநர்-முதல்வர் மோதலால் காரைக்காலில் வளர்ச்சி பாதிப்பு
புதுவையில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் காரைக்கால் மாவட்ட வளர்ச்சி பாதித்துள்ளதாக கே.ஏ.யு.அசனா எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
புதுவையில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் காரைக்கால் மாவட்ட வளர்ச்சி பாதித்துள்ளதாக கே.ஏ.யு.அசனா எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை : புதுவை மாநிலத்தில் துணைநிலை ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் இடையேயான மோதலால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொலைதூர பிராந்தியமான காரைக்காலின் வளர்ச்சி பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.
காரைக்காலில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. காரைக்கால் மாவட்டத்தில் அரசு கவனம் செலுத்துவதில்லை. காரைக்கால் கடற்கரையில் மேம்பாட்டுத் திட்டப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. காரைக்கால் நகர்ப் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்புக்காக அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டுவிட்டன. சாலையை மேம்படுத்தும் பணி மட்டும் செய்யப்படவில்லை. ஆளுநருக்கும், அரசுக்கும் நிலவும் மோதலால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பிராந்திய வளர்ச்சி ஏற்படவில்லை. இரு தரப்பாரும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு, தங்களது போக்கை மாற்றிக் கொண்டு செயல்படவேண்டும் என்றார் அவர்.