முகப்பு
புதுச்சேரி

தலித் சேனா நிர்வாகக் குழுக் கூட்டம்

புதுவை மாநில தலித் சேனா மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் அரியாங்குப்பத்தில் அதன் மாநிலத் தலைவர் சி.பாலசுந்தரம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 

Updated On : 22 அக்டோபர், 2018 at 10:02 AM
பகிர்:

புதுவை மாநில தலித் சேனா மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் அரியாங்குப்பத்தில் அதன் மாநிலத் தலைவர் சி.பாலசுந்தரம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 
அமைப்பின் அகில இந்திய தேசிய பொதுச் செயலர் எம்.திருஞானம், மாநில நிர்வாகிகள் கே.எம்.ராமசாமி, ராமன், இன்பசேகரன், மோகனசுந்தரம், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கூட்டத்தில், அட்டவணை வகுப்பினர் பெற்ற தொழில், வணிகம், கல்வி, கூட்டுறவு வீட்டுவசதி கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் பதவி உயர்வு பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்கக்கென தனிக்காவல் நிலையத்தை உருவாக்குவதுடன், சாதி வன்கொடுமைக்கு எதிராக கிராமங்கள்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்திட்டக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அரசால் பெறப்பட்ட 
சிறப்புகள் கூறுகள் திட்ட நிதி குறித்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி ஆனந்தராஜி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.