புதுச்சேரி

பாஜக சார்பில் இலவச மருத்துவ முகாம்

DIN


புதுச்சேரி லாசுப்பேட்டையில் பாஜக சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தையொட்டி, லாசுப்பேட்டை தொகுதி பாஜக சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் பெத்துசெட்டிப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தொகுதி பாஜக தலைவர் கே.சந்துரு தலைமை வகித்தார். முகாமை மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தொடக்கி வைத்தார்.
இந்த முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தலைவலி, வயிற்றுவலி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை அளித்தனர். முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கெளரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT