புதுச்சேரி

கடற்கரை தூய்மைப் பணி அக். 2 வரை நடைபெறும்: உழவர்கரை நகராட்சி ஆணையர் தகவல்

தினமணி

புதுச்சேரியில் கடற்கரை தூய்மைப் பணி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறும் என்று உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி தெரிவித்தார்.
 இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, உழவர்கரை நகராட்சி சார்பில் செப்.15 முதல் அக்.2-ஆம் தேதி வரை தூய்மையே சேவை திட்டத்தை வலியுறுத்தி தூய்மைப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது.
 இதில் இந்நகராட்சி எல்லைக்கு உள்பட்ட கடற்கரை பகுதியை ஒட்டிய நான்கு கிராமங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மைப் பணி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் குணசேகரன், சுகாதார மருத்துவ அதிகாரி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பணியில் சுமார் 230 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், பிம்ஸ் செவிலியர் கல்லூரி, சின்ன காலாப்பட்டில் இருந்து தன்னார்வலர்கள் 100 பேர் மற்றும் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த தூய்மை பணிகள் அக்.2-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார் ஆணையர் கந்தசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT