புதுச்சேரி

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அக். 12-இல் புதுச்சேரி வருகை

DIN

புதுச்சேரி ஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அக். 12-ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் தனியார் மருத்துவமனை விழாவில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை புதுவையில் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 புதுச்சேரி சேதராப்பட்டு கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பில் ரூ. 1,200 கோடியில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவமனை அமைய இருக்கிறது. 
இதன் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவும், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வருகிற அக். 12-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT