புதுச்சேரி

7-ஆவது ஊதியக் குழு அரசாணை வெளியீடு

DIN

சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டது.
7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனடியாக வழங்கக் கோரி, அரசு சொசைட்டி கல்லூரிகளைச் சேர்ந்த 4,500 ஆசிரியர்கள், ஊழியர்கள் கடந்த ஓராண்டாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். 
கடந்த 20-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த 24 -ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.சிவா முன்னிலையில், அரசுக் கொறடா அனந்தராமன் வேண்டுகோளுக்கிணங்க, சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் வே.நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடனடியாக 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி, அரசாணை வெளியிடப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்து, போராட்டத்தை முடித்து வைத்தார்.
அதன்படி, கடந்த 28 -ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசின் நிதிநிலை அறிக்கையில், அரசு சொசைட்டி கல்லூரிகளுக்கான 7 - ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய விகிதம் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை 29 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடை
பெற்றது. 
கூட்டத்துக்கு அந்தக் கூட்டமைப்பின் தலைவர் டி.ராம்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் என்.மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றி அரசாணை வெளியிட்ட முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர், வளர்ச்சி ஆணையர், உயர்கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT