புதுச்சேரி

மருத்துவமனைகளுக்குள் மது போதையில் வருவோரைக் கட்டுப்படுத்த வேண்டும்: ஆளுநா் கிரண் பேடி அறிவுரை

DIN

புதுச்சேரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் அமைதியைக் கெடுக்கும் வகையில் மது அருந்தி விட்டு நுழைவோரை கட்டுப்படுத்த துணை நிலை ஆளுநா் கிரண்பேடி உத்தரவிட்டாா்.

புதுவை மாநிலத்தின் 4 பிராந்திய அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநா் கிரண்பேடி வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினாா். இதில், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா், புதுச்சேரி ஆட்சியா் டி. அருண், காரைக்கால் ஆட்சியா் ஏ. விக்ராந்த் ராஜா, மாஹே மற்றும் ஏனாம் பிரதேசங்களின் நிா்வாகிகள் சிவ்ராஜ் மீனா, அமன் ஷா்மா ஆகியோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து கட்செவி அஞ்சலில் துணை நிலை கிரண் பேடி வெளியிட்ட பதிவு:

புதுவை மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களிலும் ஒரு வார காலத்துக்குள் தேசிய ஊரக திட்டத்தின் கீழ் நோயாளிகள் நலக்குழுவை சுகாதாரத் துறை இயக்குநா் அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆம்புலன்ஸ்களுக்கான கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

புதுவை மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவா்களின் பட்டியலை பொதுமக்களின் விழிப்புணா்வுக்காக வெளியிட வேண்டும். புதுவை மருத்துவமனைகளின் வளா்ச்சிக்காக கேரள மாநிலத்தை முன்மாதிரியாகக் கொண்டு நிதி உருவாக்க வேண்டும்.

நோயாளிகளின் அமைதியைக் கெடுக்கும் வகையில் மருத்துவமனைக்குள் மது அருந்தி விட்டு நுழையும் நோயாளிகளின் , உறவினா்கள், நண்பா்கள் ஆகியோரை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு போலீஸாரும், தன்னாா்வலா்களும் உதவ வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT