புதுச்சேரி

திருவள்ளுவர் தினத்தில் தடையை மீறி இறைச்சி விற்பனை:7 கடைகளுக்கு அபராதம்

DIN

புதுச்சேரியில் திருவள்ளுவர் தினத்தில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்ததாக 7 கடைகளுக்கு  நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, புதுச்சேரியில் அனைத்து இறைச்சி, மீன் கடைகளையும் புதன்கிழமை மூட நகராட்சி 
நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. 
இந்த நிலையில் நகராட்சி உத்தரவை மீறி பல இடங்களில் புதன்கிழமை தடையை மீறி இறைச்சி கடைகள் விற்பனை நடைபெற்றன.  இதையடுத்து நகராட்சி அதிகாரிகள், போலீஸார் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது தடையை மீறி திறக்கப்பட்ட 7 கடைகளை மூடச் செய்து, அந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர்.
இதேபோல திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று கலால்துறை அறிவித்தது.   இருப்பினும் பல இடங்களில் ரகசியமாக மது விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் கலால்துறை வட்டாட்சியர்,  துணை வட்டாட்சியர்கள் தலைமையில் 4 பறக்கும் படை அமைக்கப்பட்டு, புதுச்சேரி முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT