புதுச்சேரி

மின் கட்டண நிர்ணயம்: நாளை கருத்துக் கேட்பு

DIN

புதுவை யூனியன் பிரதேசத்தில் உத்தேச மின் கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம்  புதுச்சேரியில் வருகிற 22- ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மின் துறை கண்காணிப்புப் பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்கு முறை ஆணையம் புதுச்சேரி மின் துறை மற்றும் புதுச்சேரி மின் திறன் குழுமத்தின் 2019 - 20 ஆம் நிதியாண்டுக்கான நிகர வருவாய் தேவை, உத்தேச மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக புதுச்சேரியில் வருகிற 22- ஆம் தேதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலக் கூட்டுறவு ஒன்றியக் கட்டடத்தில் காலை 10 மணி முதல் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை ஒழுங்கு முறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.
இதற்கான விவரங்களை ‌h‌t‌t‌p://‌e‌l‌e​c‌t‌r‌i​c‌i‌t‌y.‌p‌y.‌g‌o‌v.‌i‌n மற்றும் ‌w‌w‌w.‌j‌e‌r​c‌u‌t‌s.‌g‌o‌v.‌i‌n  ஆகிய இணைய முகவரிகளிலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT