புதுச்சேரி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு:மார்க்சிஸ்ட் வரவேற்பு

DIN


மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தெரிவித்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலக் குழுச் செயலர் ஆர்.ராஜாங்கம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆளும் அரசுக்கு தடையாகவே ஆளுநர் கிரண் பேடி செயல்பட்டு வருகிறார். அவர் பதவியேற்றது முதல் போட்டி அரசை நடத்தி வருகிறார். தொழில் நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார். ஆளுநர் அலுவலகத்தை இந்துத்துவ சக்திகளின் கூடாரமாக மாற்றி, மதசார்பின்மைக்கு எதிராகச் செயல்பட்டார். அவரது நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறந்த  பாடம். அவரது மனுவை தள்ளுபடி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை வரவேற்கிறோம். புதுவை மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஆளுநர் கிரண் பேடியை மத்திய அரசு  திரும்பப் பெற வேண்டும் என அந்த அறிகையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT