புதுச்சேரி

புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை ஆணை வெளியிடக் கோரிக்கை

DIN


புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை ஆணை வெளியிடக் கோரி, முதல்வர் நாராயணசாமியிடம், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சனிக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனு விவரம்: இயற்கைக்கு கேடு விளைவிப்பதுடன், வாழ்வாதாராத்தையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மாநிலத்தில் செயல்படுத்தமாட்டோம் என புதுவை முதல்வர் நாராயணசாமி எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்கிறோம். 
அதேநேரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த தடை விதித்து புதுவை அரசு அரசாணை வெளியிட வேண்டும். இதன் மூலம் மத்திய அரசின் திட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியும். நாகலாந்தில் தடை ஆணை இருப்பதால்தான் அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என மக்களவையில் அண்மையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்
தார்.  இதேபோல, புதுவை அரசும் புதுவையின் நெல் களஞ்சியமான பாகூரையும், காவிரியின் கிளை நதியான அரசலாறு பாயும் காரைக்காலையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அரசாணை வெளியிட வேண்டும். இங்கு, ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை ஆணை பிறப்பிக்க வேண்டும். விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது, காவிரி உரிமை மீட்புக் குழுவின் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT