புதுச்சேரி

தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு: புதுவை முதல்வர் எதிர்ப்பு

DIN

அஞ்சலக உதவியாளர் பணிக்கு தமிழ் மொழி இல்லாமல், ஆங்கிலம், ஹிந்தி மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஹிந்தி, ஆங்கில மொழியில் மட்டுமே தபால் துறை தேர்வு நடத்தப்படும் என்பது சரியான முடிவல்ல. இதனால், தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் இந்த முடிவு கண்டனத்துக்குரியது.
ஹிந்தி மொழி திணிப்பால் பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படும். இதன் காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் உருவாகும்.
தமிழகம் மற்றும் புதுவை மாநில மக்களின் விருப்பத்துக்கு எதிராக ஹிந்தி மொழியைத் திணிக்க வேண்டாம். இதுதொடர்பான குறிப்பாணையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT