புதுச்சேரி

நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டு எண் கணக்கிடுதல் பயிற்சி முகாம்

DIN

புதுவை அரசின் பொருளாதாரம், புள்ளி விவர இயக்ககத்தின் சார்பில், மண்டல வாரியான நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டு எண் கணக்கிடுதல் குறித்த பயிற்சி முகாம் புதுச்சேரியில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
 புதுச்சேரி பொருளாதாரம், புள்ளி விவர இயக்ககத்தின் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமை, புதுவை அரசின் பொருளாதாரம், புள்ளி விவரச் செயலர் பத்மா ஜெய்ஸ்வால் தலைமை வகித்து, தொடக்கிவைத்தார்.
 புள்ளிவிவர இயக்ககத்தின் இயக்குநர் இரா.ராமகிருஷ்ணன் வரவேற்றார். மத்திய அரசின் புள்ளிவிவர, திட்ட செயலாக்க அமைச்சகத்தின் மத்திய புள்ளி விவர அலுவலக இயக்குநர் ராகேஷ்குமார் சிறப்புரை நிகழ்த்தினார். இந்தப் பயிற்சி வகுப்பில் விலைவாசி புள்ளி விவரங்களை எந்தெந்த பொருள்களுக்கு சேகரிக்க வேண்டும், அடிப்படை ஆண்டு மற்றும் நுகர்வோர் விலைவாசிக் குறையீட்டு எண் கணக்கிடும் முறைகள், அதற்குத் தேவையான புள்ளிவிவரங்களை சேகரிக்கப்பட வேண்டிய காலங்கள் ஆகியவை பற்றி விரிவாக விளக்கப்பட்டது. திட்டமிடுதலுக்கும், விலைவாசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கும் இந்தக் குறியீட்டு எண் கணக்கீடு மிகுந்த உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. புள்ளிவிவர இயக்ககத்தின் இணை இயக்குநர் நா.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT